செய்திகள் :

கனமழை: கோவை குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்!

post image

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இரண்டு நாள்களுக்கு அதிக கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்த தொடர் கனமழையால் கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி

திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு!

ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க

முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்!

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 29) ... மேலும் பார்க்க