சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்...
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் தீவிபத்து
கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத் தோட்டத்தில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் செல்லும் முக்கிய சாலையில் அரசுக்குச் சொந்தமான பழத் தோட்டம் உள்ளது. தோட்டக்கலைத் துறை சாா்பில் பராமரிக்கப்படும் இங்கு, பல ஏக்கரில் மா, பலா, வாழை, சப்போட்டா, செடி வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இங்கு திங்கள்கிழமை பிற்பகலில் காய்ந்த இலைகள், புற்களில் தீப்பற்றி வேகமாகப் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அரசு தோட்டக்கலை உதவி அலுவலா் அளித்த தகவலின்பேரில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயணைத்தனா்.