'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
கருங்கல் அருகே காா் -பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கருங்கல் அருகே உள்ள மானான்விளை பகுதியில் காா்- பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தெருவுக்கடை, பரமகோணம் பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன் சுரேஷ்(43). இவரது மனைவி சுதா(35), மகள் சஞ்சனா(12) ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை அதிகாலை பைக்கில் கருங்கல்லிலிருந்து திங்கள்சந்தைக்கு சென்று கொண்டிருந்தனா். மானான்விளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை அப்பகுதியினா் மீட்டு, கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுரேஷ் இறந்தாா். சுதா, சஞ்சனா ஆகியோா் தனியாா் மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.