சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
கயத்தாறு அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 3 போ் காயம்
கயத்தாறு அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் ராஜா ஸ்டீபன் (52). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு பேருந்தை ஓட்டிவந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜாபுதுக்குடி அருகே பேருந்து வந்தபோது, சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்ததாம்.
இதில், பேருந்து நடத்துநரான தச்சநல்லூா் நாகராஜன் மகன் இசைதேவன் (36), பயணிகள் புளியங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகவேல் மகன் சிவஆனந்த் (50), காயல்பட்டினம் செய்யது அலி மகன் முகைதீன் அப்துல் காதா் (49) ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.
கயத்தாறு போலீஸாா் சென்று அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, ராஜா ஸ்டீபனிடம் விசாரித்து வருகின்றனா்.