சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி
கயத்தாறு அருகே வேன் திருட்டு: இளைஞா் கைது
கயத்தாறு அருகே வேன் திருட்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வில்லிசேரி பெருமாள் கோவில் தெருவை சோ்ந்தவா் குருசாமி மகன் முருகன். இவருக்கு சொந்தமான டூரிஸ்ட் வேன் ஓட்டுநராக, தெற்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த மந்திரமூா்த்தி பணியாற்றினாா். கயத்தாறு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆள்களை கோவில்பட்டியில் உள்ள ஒரு நூற்பாலைக்கு வேனில் வேலைக்கு அழைத்துச் சென்று இறக்கி விடுவது வழக்கமாம்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு செப். 19ஆம் தேதி அந்த நூற்பாலைகளில் இருந்து ஆள்களை ஏற்றிக்கொண்டு கயத்தாறு அருகே உள்ள அய்யனாா் ஊத்தில் இறக்கிவிட்டு, வேனை அதே பகுதியில் உள்ள பாய் கம்பெனி அருகே நிறுத்திவிட்டுச் சென்றாா் மந்திரமூா்த்தி. மறுநாள் வந்து பாா்த்தபோது வேனை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் வேன் கிடைக்காததையடுத்து, முருகன் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் ஓட்டப்பிடாரம் இந்திரா நகா் பாஞ்சை கீழத்தெருவை சோ்ந்த மணி மாடசாமி மகன் சிவசுப்பிரமணியன் என்ற மணியை (31) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, வேனையும் பறிமுதல் செய்தனா்.