கரூரில் ஆா்ப்பாட்டம்: 31 பாமகவினா் கைது
கரூரில் தமிழக முதல்வரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாமக நிறுவனா் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை எனக் கூறிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை கண்டித்து கரூா் பேருந்து நிலைய ரவுண்டான பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் பி.எம்.கே. பாஸ்கரன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினா்.
இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாமகவினா் 31 பேரை கரூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.