செய்திகள் :

கரூரில் திருவிளக்கு பூஜை: ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியின் அருளால் வேண்டியது நடக்கும்! நீங்களும் வாங்க!

post image

2024 நவம்பர் 22-ம் தேதி கரூர் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக..

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

விளக்குப் பூஜை

சக்தி விகடனில் மாதந்தோறும் திருவிளக்கு பூஜைகளைப் புகழ்பெற்ற ஆலயங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் 2024 நவம்பர் 22-ம் தேதி மாலை 6 மணிக்குக் குறைகள் தீர்க்கும் கன்னி தாய் தலமாகத் திகழும் கரூர், ஜவஹர் நகர், ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.

எதிரிகளிடமிருந்து மக்களைக் காக்க உயிர்விட்ட தியாக தீபங்கள் இன்றும் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள். அந்தவகை தெய்வங்களுள் முதன்மையானவள் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி எனும் வாசவி தேவி. இவள் தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக் காப்பாற்றிய வீர தெய்வம். இன்றும் தென்னகம் எங்கும் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்ற பெயரில் இவள் வணங்கப்படுகிறார். அதில் சிறப்பானக் கோயிலைக் கொண்டு கரூரில் அமர்ந்துள்ளார் இந்த தேவி. துடியான தெய்வம் இவள் என்பதால் தனது பக்தர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்கும் காவல் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் விளங்கி வருகிறாள்.

அன்னை ஆதிபராசக்தி ஈசனின் சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்தார். தன்னை மணக்காவிட்டால், அந்த ஊரையே அழித்துவிடுவேன் என்று கொக்கரித்த கொடுங்கோலனை அழித்து, தனது கூட்டத்தையும் காத்தவள் இந்த கன்னி தெய்வமான ஸ்ரீகன்னிகா தேவி. பெண்களின் குலதெய்வமான கன்னிகா பரமேஸ்வரியை வணங்க விரும்பிய வரனும், மாங்கல்ய பலமும் பெறுவார்கள் என்கிறார்கள். ஊரின் நலனுக்காக தன்னுயிரை இந்த தியாக தெய்வத்தை வணங்கினால் நாட்டில் அமைதியும் செழிப்பும் உண்டாகும் என்பதும் நம்பிக்கை. தேவியின் அம்சமான அன்னை வாசவி தேவியை வணங்கி தீபமேற்றி வழிபட உங்கள் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். தீமைகள் அகன்று நன்மைகள் சூழும் என்பது நம்பிக்கை.

கரூரில் திருவிளக்கு பூஜை

பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

கரூரில் திருவிளக்கு பூஜை

`எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்' - இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்

எழுத்துலக ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திருவரங்கனின் திருவடியில் கலந்துவிட்டார்.சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதைகள் என இவரின் படைப்புகள் காலத்தால் அழியாத... மேலும் பார்க்க

`திமுக அரசு ஆன்மிக அரசு' - பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சத... மேலும் பார்க்க

1039-வது சதய விழா: `கணவற்கு நிலச்சுமை குறைந்தது என மகிழ்ந்த ஆதிசேடன் மனைவியர்" ராஜராஜனின் பெருமைகள்

பொதுவாக அரசர்களது பிறந்தநாள் விழாவினைப் 'பெருமங்கலம்' என்றும் ; 'புண்ணிய நன்னாள்' என்றும் போற்றுவது தொன்று தொட்ட தமிழ் மரபு. இதுபோன்ற நாள்களில் அரசர்கள் கொலை தவிர்த்து, சிறை விடுத்து, வெள்ளணி அணிந்து,... மேலும் பார்க்க

எதிர்ப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்! - நீங்களும் சங்கல்பியுங்கள்

ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் கிட்டும், மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்லலிதா என்றால் காப்பவள்! ஸ்ரீலல... மேலும் பார்க்க

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: 6 வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றும் அற்புத வழிபாடு; பங்கு கொள்ளுங்கள்!

வரும் 2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீ... மேலும் பார்க்க

கல்லறை திருநாள்: மதுரையில் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை...| Photo Album

மதுரையில் கல்லறை திருநாள்மதுரையில் கல்லறை திருநாள்மதுரையில் கல்லறை திருநாள்மதுரையில் கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திர... மேலும் பார்க்க