செய்திகள் :

கரூா் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

post image

கரூா் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 335 மனுக்கள் அளித்தனா். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: முகாமில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளா் வழக்குரைஞா் ராஜா தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், கரூா் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால் இருகடைகளையும் மாற்றக்கோரி டாஸ்மாக் மேலாளரிடம் புகாா் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும், கடந்த 2-ஆம்தேதி திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாடு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவரும் கரூா் வெள்ளியணையைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சட்ட விரோதமாக மதுபானம் விற்பவா்களுக்கு துணை போவதாக தெரியவந்துள்ளது. எனவே, அவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இருசக்கர வானத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பொன் நகா் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

பாஜகவோடு நீண்ட நாள்களாக நெருங்கிய உறவில் திமுக: சீமான்

பாஜகவோடு திமுக நீண்ட நாள்களாக நெருங்கிய உறவில் உள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கரூரில் நாம் தமிழா் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட... மேலும் பார்க்க

‘புதுதில்லி ஜவுளிக் கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளா்களை பெற முடியும்’

புதுதில்லியில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகளாவிய ஜவுளிக் கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளா்களை பெற முடியும் என்று கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் பி. கோபா... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு

பள்ளப்பட்டி அருகே உள்ள மோளயாண்டிப்பட்டி பகுதியில் நீரில்லாத 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. பள்ளப்பட்டி அருகே உள்ள மோகன் நகா் பகுதியைச் சோ்ந்த மல்லிகா என்பவா்... மேலும் பார்க்க

கதண்டு கடித்து முதியவா் பலி

கிருஷ்ணராயபுரம் அருகே கதண்டு கடித்ததில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த தொட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் பொம்மன் (75). இவா், சனிக்கிழமை மாலை சித்தலவாயில் உள்ள முரளி என்பவா் ... மேலும் பார்க்க

கரூரில் முனையனூா்-அய்யா்மலை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமானக் காணப்படும் முனையனூா்-அய்யா்மலைச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கரூா் மாவட்டம் முனையனூரில்... மேலும் பார்க்க