செய்திகள் :

கவனம் ஈர்க்கும் ஹரி ஹர வீர மல்லு பாடல்!

post image

ஹரி ஹர வீர மல்லு படத்தின் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன.

இதில், ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூன் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

நாயகி நிதி அகர்வாலின் நடன காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது. தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

மணிரத்னம் - சிம்பு கூட்டணியில் காதல் படம்?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் காதல் கதையில் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி மற்றும் ஏஸ் பட நடிகையான ரு... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலை... மேலும் பார்க்க

தீபிகா படுகோனுக்கு ஆதரவு இல்லையா? விராட் கோலியைப் போலவே தமன்னாவும் இன்ஸ்டாகிராம் மீது புகார்!

நடிகை தீபிகா படுகோன் குறித்த பதிவுக்கு தான் செய்யாமலே லைக் இடப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தொழில்நுட்பத்தின் மீது நடிகை தமன்னா குற்றம் சுமத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில்... மேலும் பார்க்க

தெற்காசிய கால்பந்து அணியுடன் தோல்வியுற்ற மான்செஸ்டர் யுனைடெட்..! புலம்பும் ரசிகர்கள்!

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் எஃப்சி தென் கிழக்கு ஆசிய கால்பந்து அணியுடன் தோல்வியுற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் தேசிய ... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசிலுடன் நடிக்க வேண்டும்: ஆலியா பட்

நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்க ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார் .நடிகை ஆலியா பட் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கென நாயகிகளில் ஒருவரான இவர், நடிகர் ரன... மேலும் பார்க்க