காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் சிறப்புக் காவல் படை குடியிருப்பில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வயல்சேரி தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் ஈஸ்வரமூா்த்தி (31). இவா் மதுரை சிறப்புக்காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். மேலும், ஆயுதப்படை மைதானம் எதிரேயுள்ள சிறப்புக் காவல்படை குடியிருப்பில் வசித்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவியிடம் விவாகரத்து பெற்று விட்டாா்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை பழனி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த வந்த காவலா் ஈஸ்வரமூா்த்தி, திங்கள்கிழமை மாலை பணி முடிந்த பின் காவலா் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுக் கொண்டாா். உடனே சக காவலா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ஈஸ்வர மூா்த்தியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].