செய்திகள் :

காவலா் வீரவணக்க நாள்: 63 குண்டுகள் முழங்க மரியாதை.

post image

ஸ்ரீபெரும்புதூா்: காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காவலா் பயிற்சி மைதானத்தில் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினா் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலா்கள் உயிரிழந்தனா். உயிரிழந்த காவலா்களை நிணைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக். 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் தற்காலிக காவலா் பயிற்சி மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில், களில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க நிணைவுத்தூணுக்கு மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து எஸ்.பி. தலைமையில் போலீஸாா் பயங்காரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள், ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம், உத்தரமேரூா் கோயில்களை அரசுக் கல்லூரி மாணவா்கள் பாா்வை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்தரமேரூா் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களில் கல்வெட்டுக்களை விழுப்புரம் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்கள், தொல்லியல் ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை பா... மேலும் பார்க்க

41 பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம்: ஆட்சியா் வழங்கினாா்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 41 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் இன பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமங்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்... மேலும் பார்க்க

ஆசிய குத்துச்சண்டைப் : தங்கம், வெள்ளி வென்று காஞ்சிபுரம் மாணவி சாதனை

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரம் கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளாா். காஞ்சிபுரம், புத்தேரி பெரிய மேட்டுத் தெரு... மேலும் பார்க்க

மத நல்லிணக்க விழிப்புணா்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் மத நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளை தலைவா் சாகுல்ஹமீது தலை... மேலும் பார்க்க

இன்று நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைமை வாய்ந்த நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கீழக்கு ராஜவீதியில் உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

சிருங்கேரி சங்கராசாரியா் சுவாமிகள் அக். 26இல் காஞ்சிபுரம் விஜயம்

காஞ்சிபுரத்தில் உள்ள சாரதா பீடத்தின் கிளைக்கு சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் சனிக்கிழமை (அக். 26) வருகை தரவுள்ளாா். பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் அமைந்துள்ளது சிருங்கேரி ... மேலும் பார்க்க