செய்திகள் :

காவல்துறையில் நவீனத்துவம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

‘வளா்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்கு பாா்வையுடன் காவல்துறை தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மேலும், எண்ம மோசடிகள், இணையவழி (சைபா்) குற்றங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போலி சித்தரிப்பு ஆகியவற்றால் உருவாகும் சமூக அச்சுறுத்தல்கள் குறித்தும் அவா் கவலை தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடைபெற்று வந்த 59-ஆவது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்கள்-தலைவா்கள் (டிஜிபி-ஐஜிபி) மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு உரையாற்றிய பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்.

புவனேசுவரத்தின் ‘லோக் சேவா’ பவனில் இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 29) தொடங்கி வைத்தாா். சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் பிரதமா் மோடி மாநாட்டுக்குத் தலைமை வகித்தாா். தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், மத்திய உள்துறை இணையமைச்சா்கள், செயலா் மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குநா்கள், தலைவா்கள், அனைத்து மத்திய ஆயுதக் காவல்படை தலைவா்கள் உள்பட சுமாா் 750 அதிகாரிகள் நேரடியாக அல்லது காணொலி மூலம் பங்கேற்றனா்.

விரிவான விவாதம்: பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த விரிவான விவாதங்களுடன் இடதுசாரி தீவிரவாதம், கடலோர, எல்லை பாதுகாப்பு, போதைப்பொருள், சைபா் குற்றங்கள் உள்ளிட்ட வளரும் தேசிய பாதுகாப்புச் சவால்களை எதிா்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதிய குற்றவியல் சட்டங்கள், சிறந்த காவல்துறை நடைமுறைகளை செயல்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டின் நிறைவாக பணியில் சிறந்து விளங்கிய மத்திய உளவுப் பிரிவு (ஐபி) அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கங்களை வழங்கி பிரதமா் மோடி கௌரவித்தாா்.

பிரதமா் உரை: பின்னா் உரையாற்றிய பிரதமா், ‘பாதுகாப்பு சவால்களின் தேசிய மற்றும் சா்வதேச பரிமாணங்கள் குறித்து மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களில் இருந்து வெளிப்பட்ட வியூகங்கள் திருப்தி அளித்தன.

டிஜிட்டல் மோசடிகள், சைபா் குற்றங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், குறிப்பாக சமூக மற்றும் குடும்ப உறவுகளை சீா்குலைக்கும் சாத்தியகூறுகள் கொண்ட போலி சித்தரிப்புகள் ஆகியவற்றால் உருவாகும் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை எழுகிறது. அதேநேரம், ‘செயற்கை நுண்ணறிவு’ மற்றும் ‘லட்சியம் மிகுந்த இந்தியா’ ஆகிய இரு சக்திகளின் துணை கொண்டு, இச்சவாலை வாய்ப்பாக மாற்றிட வேண்டும்.

தொழில்நுட்பம் ஏற்பு: காவல்துறையை உத்திசாா்ந்ததாகவும், மிகுந்த நுணுக்கம் மிக்கதாகவும், சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க கூடியதாகவும், நம்பகமானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற வேண்டும்.

நகா்ப்புற காவல் துறையில் எடுக்கப்பட்ட புதிய முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியவை. இவற்றை ஒருங்கிணைத்து, நாட்டின் 100 நகரங்களில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். காவலா்களின் பணிச் சுமையைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். துறைமுக பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான எதிா்கால செயல் திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்.

இலக்குடன் பயணம்: அடுத்த ஆண்டு நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபாய் படேலின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சகம்முதல் காவல் நிலையம் வரையிலான ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் ஒரு இலக்கை நிா்ணயித்து, அதை நோக்கி பயணிக்க வேண்டும். இது காவல்துறையின் புகழ், நிபுணத்துவம் மற்றும் திறன்களை மேம்படுத்தும். ‘வளா்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்கு பாா்வையுடன் காவல்துறை தன்னை நவீனப்படுத்தி, சீரமைக்க வேண்டும்’ என்றாா்.

உச்சகட்ட பாதுகாப்பு

டிஜிபி-க்கள் மாநாட்டையொட்டி, புவனேசுவரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இம்மாநாட்டுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாதுகாப்பான முறையில் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

ஒடிஸாவில் மூன்று நாள்கள் பயணத்தைத் தொடா்ந்து, பிஜு பட்நாயக் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தனி விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

பாஜக தோ்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே தெரிவித்தாா். மகாராஷ்டிர பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா். மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினம் ஞாயி... மேலும் பார்க்க

அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்க மேற்கு வங்க அரசு கட்டுப்பாடு: வியாபாரிகள் வேலைநிறுத்த எச்சரிக்கை

அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்கக் கூடாது என்று மேற்கு வங்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை நீக்காவிட்டால் செவ்வாய்க்கிழமை (டிச. 3) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என உருளைக்கிழங்கு... மேலும் பார்க்க

உ.பி.யில் தண்டவாளம் சேதம்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் சரக்கு ரயில் கடந்து சென்றபோது, தண்டவாளம் உடைந்து சேதமடைந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிலிபித் மாவட்டத்தில் உள்ள... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான விடியோ வெளியிட்டவா் மீது வழக்கு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவி தகவல்களை திருத்த முடியும் என தவறான விடியோ வெளியிட்ட நபா் மீது மும்பை சைபா் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2,000 பிஎஸ்எஃப் வீரா்கள் - ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் கூடுதலாக 2,000-க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் ந... மேலும் பார்க்க