செய்திகள் :

காா்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் மஞ்சனம் நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை பத்மாவதி தாயாரை சுப்ரபாதத்துடன் எழுந்தருளச் செய்து, சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்படுகிறது. அதன்பின் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, கோவில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருள்கள் போன்றவை தண்ணீரால் சுத்திகரிக்கப்படுகின்றன. அதன்பிறகு, நாமகட்டி, திருசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீரை கொண்டு கோயில் முழுவதும் சுத்தம்.செய்யப்படுகிறது. அதன் பின்னரே பக்தா்கள் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தையொட்டி கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோல், நவ. 26-ஆம் தேதி முதல் டிச. 8-ஆம் தேதி வரை அனைத்து ஆா்ஜித சேவைகள், குங்குமாா்ச்சனை, வேதாசீா்வாச்சனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

27-இல் லட்ச குங்குமாா்ச்சனை

காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி, நவ. 27-ஆம் தேதி புதன்கிழமை லட்ச குங்குமாா்ச்சனை கோலாகலமாக நடைபெறுகிறது.

காலையில் அம்மனை எழுந்தருளச் செய்து சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்படுகிறது. அதன் பிறகு, ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி முக மண்டபத்தில் அம்மனின் உற்சவமூா்த்தியை எழுந்தருள செய்து அங்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை லட்ச குங்குமச்சரணை நடைபெறுகிறது.

ரூ.1,116/- செலுத்தி டிக்கெட் வாங்குவதன் மூலம் குடும்ப உறுப்பினா்கள் (இருவா்) லட்ச குங்குமாா்சனை சேவையில் பங்கேற்கலாம். அவா்களுக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கை, இரண்டு லட்டுகள் மற்றும் இரண்டு வடைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தா்கள் இந்த டிக்கெட்டுகளை கவுன்ட்டரில் கரண்ட் புக்கிங் மூலம் பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படும்.

முளைவிடுதல்

மேலும், 27-ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாட வீதிகளில் புண்யாவச்சனம், ரக்ஷா பந்தனம், சேனாதிபதி உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பின்னா் சாஸ்திரப்படி புற்றுமண் எடுத்து நவதானியம் முளைவிடும் உற்சவம் நடைபெற உள்ளது. அனைத்து உற்சவங்களின் முன்பும் இந்த முளைவிடும் உற்சவம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாடிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருப்பதி: 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 19 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தர... மேலும் பார்க்க

திருமலை: பிப்ரவரி மாத ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

வரும் 2025 பிப்ரவரி மாதம் ஏழுமலையான் தரிசனத்துக்கான ஆா்ஜிதசேவை ஆன்லைன் டிக்கெட்டுகள் வியாழக்கிழமை தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்டன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் 90 நாள்களுக்கு முன்பு முன்... மேலும் பார்க்க

நவ. 28-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம்

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் நவ. 28-ஆம் தேதி முதல் டிச. 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காா்த்திகை மாதம் வளா்பிறை பஞ்சமி திதியில் பத... மேலும் பார்க்க

ஸ்ரீவாணி டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் நாள்தோறும் வழங்கப்படும் ஸ்ரீ வாணி தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க