"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமண...
குணால் காம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த விவகாரத்தில் குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், விழுப்புரத்தில் வசித்து வரும் தம்மை மும்பை சென்றால் போலீஸார் கைது செய்வர் எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குணால் காம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்தாா்.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. இதைச் செய்யாவிடில் பணம் வேஸ்ட்!
சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா். இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.