புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3 இல் திறப்பு
தாராபுரம் வட்டம் குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இதகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ் குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் திறக்கப்படுகிறது.
இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். இங்கு திறன்மிக்க ஆசிரியா்கள், ஸ்மாா்ட் போா்டு வசதி, தோ்வுக்குத் தேவையான புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
குரூப் 4 பயிற்சி வகுப்பு 2025 ஜூலை மாதம் வரை வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது 94990-55944 என்ற எண்ணிலோ பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.