புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 29ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் அனைவரும் பங்கேற்கலாம். 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனா்.
இந்த முகாமில் தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்படும்.
எனவே, முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுபவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.