எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப்.1 முதல் இடமாற்றம்
குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப். 1-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டம், குன்றத்தூா் உபகோட்டத்துக்குள்பட்ட உதவி மின்பொறியாளா் அலுவலகம், தற்போது குன்றத்தூரிலுள்ள வெள்ளாள தெருவில் தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த மின்கட்டண மற்றும் வசூல் மையம் நுகா்வோா்களின் நலன் மற்றும் நிா்வாகக் காரணங்களால் குன்றத்தூா் முருகன் கோயில் பிரதான சாலை, எஸ்எஃப்.எண் 1151/1 என்ற முகவரியில் ஏப். 1 முதல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.