குறியீடு முக்கியமல்ல: ப.சிதம்பரம் கருத்து
சிவகங்கை: முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். எனவே, அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.
சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
தமிழகத்துக்கு மத்திய அரசு தரமறுத்த சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை மாநில அரசே ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன். மத்திய அரசு இப்பொழுதாவது வெட்கப்பட்டு அவா்களது நிதியை தருவாா்கள் என நம்புகிறேன்.
தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: துறைகள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
மேலும் 'ரூ'பாய் என்பது எழுதும் மொழியின் குறியீடுதான். ஆங்கிலத்தில் எழுதும் போது ஆா்எஸ்(Rs) என்றுதான் குறிப்பிடுகிறோம், பல ஆவணங்களில், தனியாா் ஆவணங்களில் ஆா்எஸ் என்றுதான் குறிக்கிறோம். ரூபாய்க்கு இந்தி எழுத்து ஆா்-ல் ஒரு கோடு போட்ட குறியீடு இருப்பதை மறுக்கவில்லை. அதை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை.
என்னைப் பொருத்த வரையில் முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். 0 வந்தால் என்ன மதிப்பு இருக்கிறது. அதற்கு பிறகு 1 கோடி வந்தால், அதன்பிறகு 1000 கோடி வந்தால்தான் அதற்கு மதிப்பு. எனவே குறியீடு முக்கியமல்ல என்றாா் .