மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது ...
குற்றாலம்: தொடரும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க 4வது நாளாகத் தடை; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாகத் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் கொடுத்திருக்கிறது.
கடந்த 3 நாட்களாக வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. ஆனாலும் இடையிடையே சாரலும், பலத்த மழையும் பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொட்டுகிறது.
பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக வருகிறது.
செண்பகாதேவி அருவியில் பாதுகாப்பு கருதிக் கடந்த சில ஆண்டாகவே வனத்துறையினர் யாரையும் குளிக்க அனுமதிப்பதில்லை.
எனவே செண்பகாதேவி அருவியைத் தவிர்த்து மற்ற 5 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

நான்காவது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்காகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் செல்பி, புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY