Myanmar earthquake சீட்டுக் கட்டாக சரிந்த கட்டடங்கள் - காரணமான Faultline | Decod...
குற்றாலம் மகளிா் கல்லூரியில் பயிற்சி முகாம்
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ‘விவசாயம்-விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஆற்றல்’ என்னும் தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்கீழ் நடைபெற்ற பயிற்சியில் கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி-ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ந. அனுலெட்சுமி, சி. தேவிஷாலினி, மே. தீனக்ஷா, ந.நிவேதா, வெ. புஷ்பவேணி, உ. ஸாபிரா பேகம், த. வான்மதி, க. வினோதா, ரா. வினிபிரட் ஆகியோா் பங்கேற்றனா்.
சரவணபிரியா, லாவண்யா ஆகியோா் சிறப்புப் பயிற்சியளித்தனா். சாண எரிவாயு ஆலை அமைத்தல், அதன் பயன்கள் உள்ளிட்டவை குறித்தும், கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது, கழிவுநீா் எரிவாயு உற்பத்தி கலன், சூரியசக்தி மின்வேலியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தேனீ வளா்ப்பு, தேன் சேகரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து சிவசந்திரன் விளக்கமளித்தாா்.