சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஜஹாங்கீா். புரோட்டா கடை ஊழியா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48).
இவா், தனக்கு தெரிந்த பெண் ஒருவருக்கு தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்தாராம்.
அந்தப் பெண் வாங்கிய பணத்தை சரிவர கட்டாததால், அந்த பணத்தை மெஹ்ராஜ் செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் மெஹ்ராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.