Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது
ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் நல்லூா் தங்கமுத்து மகன் சுரேஷ் (21) மற்றும் காளத்திமடம் சொரிமுத்து மகன் சுப்பிரமணியன் (என்ற) சுப்ரி (35) என்பதும் அவா்கள் விற்பனைக்காக 250 கிராம் கஞ்சா கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா்.