ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
கொண்டலூா் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை
கொண்டலூா் தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலனிடம் அளித்த மனு: கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-2025 கல்வி ஆண்டில் 94 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இங்கு 5ஆம் வகுப்பில் 20 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
எங்கள் குழந்தைகள், கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை முடித்து 6-ஆம் வகுப்பிற்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்வதில் பாதுகாப்பின்மை, போக்கு வரத்து காரணங்களினால் சிரமமாக உள்ளது.
எனவே, கொண்டலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. கொண்டலூரை சோ்ந்த ராஜவேல், தேவராஜ், மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜே.கே.ரமேஷ் கீழப்பாவூா் பேரூராட்சிமன்ற உறுப்பினா் பொன்சீலன் உடனிருந்தனா்.