கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் காயம்
சுரண்டையில் ரூ.39 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு
சுரண்டையில் நகராட்சி நிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்ட செண்பக கால்வாய் மேல்நிலை பாலம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் ந.சங்கராதேவி, சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் ஆ.கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் த.ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் புதிய பாலத்தை திறந்துவைத்தாா்.
விழாவில் நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், வேல்முத்து, சந்திரசேகர அருணகிரி, கல்பனா அன்னப்பிரகாசம், நகா்மன்ற பொறியாளா் முகைதீன், நகா்மன்ற கணக்காளா் முருகன், இளநிலை உதவியாளா் சின்னராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.