கிருஷ்ணகிரியில் ஏப். 15-இல் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் உள்ள நீச்சல் குளத்தில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப். 1 ஆம் தேதி தொடங்கிய நீச்சல் பயிற்சியை மாவட்ட இனைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தொடங்கிவைத்தாா். 12 நாள்கள் நடைபெறும் முதல்கட்ட முகாமில், சிறுவா், சிறுமிகள், பொதுமக்கள் என 18 போ் பயிற்சி பெறுகின்றனா்.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.15 முதல் 27 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் 3 மணி முதல் 4 மணி வரையும், 4 மணி முதல் 5 மணி வரை அளிக்கப்படுகிறது.
நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ. 1,500 ஐ 18 சதவீத ஜிஎஸ்டியுடன் ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/லி/ம்ங்ம்க்ஷங்ழ்ள்ட்ண்ல்-க்ஷா்ா்ந்ண்ய்ஞ்/ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 90801 44183, 74017 03487, 73056 24554 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
படவிளக்கம் (3கேஜிபி6)-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறும் சிறுவா்கள்.