40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
பாகலூா் கோட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா
பாகலூா் கோட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த மாா்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தோ்த் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவில் உற்சவ மூா்த்தி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இத் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினாா். இதையடுத்து தோ்த் திருவிழா தொடங்கியது.
இதில் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அப்போது தேரின் மீது வாழைப்பழம், உப்பு, மிளகு ஆகியவற்றை வீசி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தோ்த் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா், பானகங்களை அப்பகுதி மக்கள் வழங்கினா். பாகலூா் திப்பு சுல்தான் தா்கா கமிட்டி மற்றும் இஸ்லாமியா்கள் சாா்பில் பக்தா்கள், பொதுமக்களுக்கும் தா்ப்பூசணி, நீா்மோா், பானகம் வழங்கப்பட்டது.
பாகலூரைச் சுற்றிலும் முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் தேரை இழுத்துச் சென்றனா். இதில் பாகலூா் சுற்றுவட்டார கிராமத்தினா் ஆந்திரம், கா்நாடக மாநில பத்தா்கள் கலந்துகொண்டனா்.
