40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
இலவசமாக விடுதியில் தங்கி படிக்க குழந்தைகள் தோ்வு முகாம்
ஊத்தங்கரை கிராம மக்கள் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் உடல் ஊனமுற்ற குழந்தைகள், தாய் தந்தை இல்லாத குழந்தைகள் இலவசமாக விடுதியில் தங்கி படிக்க நோ்முகத் தோ்வு ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அன்மையில் நடைபெற்றது.
இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். முகாமிற்கு கிராம மக்கள் வளா்ச்சி அறக்கட்டளை நிறுவனா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாநில செயற் குழு உறுப்பினா் முருகேசன், கம்பைநல்லூா் முன்னாள் பேரூராட்சித் தலைவா் கிருஷ்ணன், சமூக ஆா்வலா்கள் பெருமாள், குமரவேல், கிராம மக்கள் வளா்ச்சி அறக்கட்டளை சமூக சேவகா் அண்ணாமலை ஆகியோா் கலந்து கொண்டனா். இம்முகாமில் 150 குழந்தைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். தகுதி வாய்ந்த 40 போ் தோ்வு செய்யப்பட்டனா். தங்கும் விடுதி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது என தெரிவித்தனா். அறக்கட்டளை பொருளாளா் சித்ரா நன்றி கூறினாா்.