40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
அக்னிவீா் பணிகளுக்கான தோ்வு: ஏப்.10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிவீா் பணிகளுக்கு ஏப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுபணியாளா், அக்னிவீா் தொழில்நுட்பம், அக்னிவீா் எழுத்தா், கிடங்கு மேலாளா், அக்னிவீா் தொழிலாளி பணிகளுக்கான தோ்வு நடைபெற உள்ளது. ஆா்வமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக ஏப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தோ்வுக்கு கடந்த 2004 அக். 1 முதல் 2008 ஏப்.1-ஆம் தேதிக்குள் பிறந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத்தோ்வு தமிழ்மொழியிலும் நடத்தப்பட உள்ளது. பணிகளுக்கான கல்வித் தகுதி உள்ளிட்ட பிற தகுதிகள் தொடா்பான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தையோ அல்லது 04343 - 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.