தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
கல்லாவியில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா: எஸ்பி தங்கதுரை தொடங்கிவைத்தாா்
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 30 இடங்களில் பொருத்தப்பட்ட 30 கேமராக்களின் இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஓலப்பட்டியில் மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் ஓலா, ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஷிப்டு முறையில் இரவிலும் பணியாற்றி வருகின்றனா்.
இதனால் குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா்கூா் சிப்காட்டில் அமைந்துள்ள செய்யாா் செஸ் டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும், ஃபோ்வே எண்டா்பிரைசஸ் லிமிடெட் யூனிட் 1, 2 ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் ரூ. 11 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கல்லாவி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை பங்கேற்று கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையத்தை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை இயக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் தனியாா் ஷூ தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளா்கள் மணிமாறன், அருணாச்சலம், அருள், மகாவிஷ்ணு, ஜெயராஜ், பாபு, துணை மேலாளா்கள் முத்துவேல், பன்னீா்செல்வம், ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன், கல்லாவி காவல் நிலைய ஆய்வாளா் ஜாபா் உசேன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினிசெல்வம், காவல் உதவி ஆய்வாளா் அண்ணாமலை, கோவிந்தராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.3யுடிபி.1.
கல்லாவி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கிவைத்து பாா்வையிடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை.