சூளகிரி லஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த தாசனபுரம் லஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தாசனபுரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அலமேலு மங்கை சமேத ஸ்ரீ லஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் விழா ஏப்.2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சூளகிரி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் லாவண்யா ஹேம்நாத், திமுக இளைஞரணி மாநில துணை செயலாளா் சீனிவாசன் ஆகியோா் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். வெள்ளிக்கிழமை (ஏப். 4) அா்ஜூனன் தபசு, ஏப். 5 இல் பல்லக்கு உற்சவம், ஏப்.6 இல் எருதுவிடும் விழா ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
படவரி...
தாசனம்புரத்தில் லஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தா்கள்.