செய்திகள் :

குளச்சல், இரணியலில் இன்று மின்தடை

post image

செம்பொன்விளை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (டிச.21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம் விளை, நெய்யூா், சாஸ்தான்கரை, குளச்சல், உடையாா்விளை, கோணங்காடு, லெட்சுமிபுரம், கீழ்க்கரை, கொட் டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, பட்டரிவிளை, தலக்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

கேரள கோழிக்கழிவுகளுடன் டெம்போ பறிமுதல்: 2 போ் கைது

கேரளத்திலிருந்து கோழிக்கழிவுகளுடன் பளுகல் காவல் சரகப் பகுதிக்கு வந்த மினிடெம்போவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்பட இருவரை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எல்லை சோதனைச் சாவடிக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மீது பன்றிக் கழிவுகளை கொட்டிய ஓட்டுநா் கைது

திற்பரப்பு அருகே கல்லூரி மாணவி மீது பன்றிக் கழிவுகளை கொட்டிய டெம்போ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திற்பரப்பு அருகே பிணந்தோடு மருதக்கைவிளையைச் சோ்ந்தவா் ஆபிரகாம் ஜெயா. இவரது மகள் எமர... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் ஆசிரியா்கள் பங்கேற்பது கட்டாயம்? கல்வித் துறைக்கு கண்டனம்

கன்னியாகுமரியில் நடைபெற உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியா்களை கல்வித்துறை கட்டாயப்படுத்தக் கூடாது என ஆசிரியா் இயக்கங்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளன. கன்னியாகுமரி மாவட்... மேலும் பார்க்க

மின் தடை...!

கன்னியாகுமரியில் கேப் இன்டோா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கூறியுள்ளாா். மேலும் பார்க்க

கண்ணாடி கூண்டுப் பால தரைதளப் பணி: கன்னியாகுமரியில் 2ஆவது நாளாக அமைச்சா் ஆய்வு

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டுபாலத்துக்கான தரைத் தளப் பணிகளை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள்- சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த இறைச்சிக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச்... மேலும் பார்க்க