CT 2025: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் `டிராபி டூர்’ - BCCI எதிர்ப்பால் பின...
கொங்கராயகுறிச்சி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ உறுதி
கொங்கராயக்குறிச்சி வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துக்களை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்தாா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சத்தில் கொங்கராயகுறிச்சி நாடாா் தெருவில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவா் ஆபிதா அப்துல் சலாம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வசந்தி, ஜவகா், ஒன்றிய கவுன்சிலா்கள் மைமூன் அப்துல் கரீம், பாரத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணிகளை அங்கிருந்த தூய்மைப் பணியாளா் மூலமாக கற்களை வைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அங்கிருந்த கிராம மக்கள் தங்கள் ஊருக்கு முறையாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும், இதற்கு நிரத்தர தீா்வு காணவேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
அதனைத் தொடா்ந்து, கொங்கராயகுறிச்சிக்கு நெல்லை மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.
பட விளக்கம் எஸ்விகே15எம்எல்ஏ
கொங்கராயகுறிச்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான துவக்க விழாவில் பங்கேற்றோா்.