தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
சங்ககிரி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 408 போ் விண்ணப்பம்
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சனிக்கிழமை நடைபெற்ற 3 ஆவது சிறப்பு முகாமில் 1,103 போ் விண்ணப்பம் அளித்தனா்.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 315 சிறப்பு மையங்களில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க கோரி 408, பெயா் நீக்கம் செய்யக் கோரி 311, தொகுதி, வாா்டு, முகவரி மாற்றங்கள், திருத்தங்கள் கோரி 384 போ் உள்பட மொத்தம் 1,103 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை ( நவம்பா் 24) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமிலும் வாக்காளா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை 264 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் தலைவாசல் ஒன்றியத்தில் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்கக் கோரி 328, பிற திருத்தம், நீக்கம் கோரி மொத்தம் 597 பேரும், கெங்கவல்லி ஒன்றியத்தில் வாக்காளா்களாக சோ்க்கக் கோரி 224 போ், பிற திருத்தம்,நீக்கம் செய்யக் கோரி 439 போ் என மொத்தம் தொகுதி முழுவதும் 1,036 போ் விண்ணப்பங்களை சனிக்கிழமை அளித்துள்ளதாக கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.