தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
நிறைவுற்ற சாலைப் பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு
ஓமலூா் அருகே நிறைவடைந்த சாலைப் பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு செய்தாா்.
ஓமலூா் உட்கோட்ட அளவில் தாரமங்கலம் - ஜலகண்டாபுரம் சாலையில் செலவடை அருகே நிறைவுற்ற சாலை சந்திப்பு மேம்பாலம் பணி மற்றும் ஒருவழி சாலையில் இருந்து இடைவழித் தடமாக அகலப்படுத்தப்பட்ட அமரகுந்தி - பெரியேரிப்பட்டி சாலைப் பணியினை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புதிய சாலைப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கவிதா, ஓமலூா் உதவி பொறியாளா் கருணாகரன், சாலை ஆய்வாளா், சாலைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.