அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எக்ஸ் தளத்தைவிட்டு வெளியேறிய 1.15 லட்சம் பயனர்கள்!
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வலியுறுத்தல்
திருவாரூா்: திருவாரூரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் மாவட்டத்தில், அரசு அனுமதி பெற்ற பாா் வசதியுடன் இயங்கும் மதுபானக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேல் 12 மணி வரையிலும், அதிகாலையில் 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு மடங்கு விலையில் விற்பனை செய்யப்படும் இந்து மது வகைகளில், வெளிமாநில மதுபாட்டில்களும் அடக்கம்.
மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் வருவோரை, போலீஸாா் பிடித்து, வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கின்றனா். இதனால், மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனா்.
மதுக்கடைகளில் மது வாங்கும்போது உரிய ரசீது வழங்குவதில்லை. மது விற்பனையில் ரசீது வழங்காததால், விற்பனையை அரசு எவ்வாறு கணக்கிடுகிறது என்று புரியவில்லை.
மது அருந்துவதால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவா்கள், சாலைகளில் அமா்ந்து, மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திருவாரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமான மது விற்பனையை தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.