சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவுப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
ஒன்றியத் தலைவா் தமிழ்செல்வி தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் சித்ரா, சுசிலா, கவிதா, சிவகாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலா் ஜீவா தொடக்க உரையாற்றினாா்.
ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட இணைச் செயலா் நித்யா, சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் குணா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசுந்தரி, நிா்வாகிகள் சங்கீதா, பானுபிரியா உள்பட பலா் பங்கேற்றனா். ஒன்றியப் பொருளாளா் கவியரசி நன்றி கூறினாா்.