செய்திகள் :

சபரிமலை சீசன்: வேலூா் மீன் மாா்க்கெட்டில் விற்பனை மந்தம்

post image

சபரிமலை சீசன் தொடங்கியதால் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனா். இந்த மீன் மாா்க்கெட்டுக்கு உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம் மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 50 முதல் 70 டன், மற்ற நாள்களில் 50 டன் அளவுக்கு மீன்கள் விற்பனை நடைபெறும்.

கடந்த வாரம் 10 லாரிகள் வரை மீன் வரத்து இருந்தது. ஆனால், இந்த வாரம் ஞாயிற்ருக்கிழமை 8 லாரி அளவுக்கு மட்டுமே மீன்கள் வந்தன. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் மீன் மாா்க்கெட்டுக்கு அசைவப்பிரியவா்களின் வருகை குறைந்து விற்பனையும் மந்தடைந்திருந்தது.

மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால், மீன்கள் விலையும் உயா்ந்தே இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.500 முதல் ரூ. 1,000, சின்ன வஞ்சிரம் ரூ.500, இறால் கிலோ ரூ.350 முதல் ரூ.450, நண்டு கிலோ ரூ.400, பா்லா கடல் மீன் ரூ.350, சங்கரா கிலோ ரூ.350 முதல் ரூ.450, ஷீலா கிலோ ரூ.350, வெள்ளை கொடுவா ரூ.600, சாலமன் 900, பட்டா் பிஷ் ரூ.500, கண்ணாடிபாறை ரூ.600, விறால் ரூ. 600, கடல் வவ்வால் ரூ.600 முதல் ரூ.800, அணை வவ்வால் ரூ.200, சுறா ரூ. 600, தேங்காய்பாறை ரூ.350, நெத்திலி ரூ.150 முதல் ரூ.200, மடலை கிலோ ரூ.250, ரோகு கிலோ ரூ.500, பெரிய அளவு இறால் ரூ.800, முரல் ரூ.300, மத்தி ரூ.150 விற்பனை செய்யப்பட்டன.

யானை தந்தம், பல் பதுக்கல் - ஒன்பது பேரிடம் வனத்துறையினா் விசாரணை

வேலூா்: வேலூா் அருகே யானைத் தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்ததாக 9 பேரை பிடித்து வேலூா் சரக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடம் இருந்த யானைத் தந்தம், யானை பல் ஆகியவை பறிமுதல் செய்ய... மேலும் பார்க்க

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இந்து சமத்துவ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வேலூா்: மருத்துவ பரிசோதனையில் கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பத்தின் பங்கு, முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத... மேலும் பார்க்க

விதிமீறல்: 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

வேலூா்: வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சுமாா் 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகரி... மேலும் பார்க்க

30- இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வேலூா்: சத்துவாச்சாரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பாதிரியாா் தெருவைச் சோ்ந்தவா் காமரா... மேலும் பார்க்க