செய்திகள் :

சமூக ஆர்வலர் கொலை வழக்கு; குவாரி உரிமையாளர்கள் மீது குண்டாஸ்; ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

post image

விதிமீறல் குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் அதிமுக-வைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் பகுதியில் சடவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, குவாரிகளை செயல்படாமல் தடுக்கும் வகையில் உத்தரவு பெற்றார். இதனால் குவாரி உரிமையாளர்கள் அவரை மிரட்டி வந்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிக்லை. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி ஜெகபர் அலி இறந்தார்.

கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி

இது திட்டமிட்ட கொலைதான் என்று பல்வேறு கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் தீவிர போராட்டம் நடத்திய பிறகு மிரட்டல் விடுத்த கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமய்யா, தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்பு வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. முருகானந்தம், ராமய்யா, ராசு ஆகியோர் கடந்த பிப்ரவரி 22 -ல் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.

தங்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேற்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரணை நடத்தியதில் "குண்டர் தடுப்பு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை மீறப்படவில்லை, மனுக்கள் பரிசீலனைக்கு தகுதியற்றவை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிடப்பட்டது.

மும்பை: கழிவறை ஜன்னலை உடைத்து கடத்தல் நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்; 17 குழந்தைகள் பத்திரமாக மீட்பு!

மும்பை பவாய் பகுதியில் உள்ள பி.ஆர்.ஸ்டூடியோவில் வெப் சீரிஸ் ஒத்திகைக்காக மும்பை, நவிமும்பை, கோலாப்பூர், சாங்கிலி, சதாரா போன்ற இடங்களில் இருந்து 100 குழந்தைகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அக்குழந்தைகளுக... மேலும் பார்க்க

'வெளியூரில் இருக்கிறார்!' - மகள்களோடு சேர்ந்து கணவரை கொன்று புதைத்து, 50 நாள்களாக நாடகமாடிய மனைவி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது: 53). பழனிவேலுக்கு திருமணம் நடந்து மனைவி மற்றும் தமிழ்ச்செல்வி, சாரதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருகின்றனர். இதில்... மேலும் பார்க்க

வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - காதலனுடன் கைதான பெண்!

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாய் மெட்டில்டா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. கோவைலோகேந... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் - இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். ... மேலும் பார்க்க

கோபப்படுத்தினால் தீ வைத்துவிடுவேன்; 17 குழந்தைகளைக் கடத்திய மும்பை நபர் கைது

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. நேற்று திடீரென ரோஹித் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.ஸ்டூடியோவில் குழந்தைகள் திரைப்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இ... மேலும் பார்க்க