'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
'சம்பளமே வேண்டாம்; மக்களுக்காக வேலை செய்றோம்!' - போராடிய தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை!
சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 அலுவலங்களின் அருகே சாலைகளை சுத்தம் செய்து போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை ஆகியவற்றின் அருகேயும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகி வந்தனர். இந்நிலையில், இன்று மண்டலங்கள் 5,6 ஆகியவற்றின் அலுவலகங்கள் அருகே சாலைகளை சுத்தம் செய்து தங்களை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைக்காலம் வருவதால் மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு 31.07.2025 தேதிய நிலையிலேயே தங்களை பணியில் எடுக்குமாறு கோரினர். சம்பளம் கூடல் இல்லாமல் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் கூறினர்.
சாலைகளை சுத்தம் செய்து போராடிய பெண் தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அரும்பாக்கம், மதுரவாயில் ஆகிய இடங்களில் உள்ள திருமண மண்டபங்களிலும் சமூக நலக்கூடங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.

















