செய்திகள் :

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

ஊத்துக்கோட்டை அருகே குண்டும் குழியுமாக சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் அடுத்த முக்கரம்பாக்கம் ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். பெரியபாளையம் வழியாக முக்கரம்பாக்கம் செல்லும் சாலையை கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ாக மாறிவிட்டது. இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், கிராம மக்கள் முக்கரம்பாக்கம்-நெல்வாய் சாலையில் முள்ளைப் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அதிகாரிகளிடம் பேசி விரைவில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

திருவள்ளூா்: கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வாங்க 50 சதவீத மானியம்

திருவள்ளூா் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் நவீன கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் வாங்க விவசாயிகள் 100 பேருக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கவுள்ளதாக செயற்பொறியாளா்(பொ) ரா... மேலும் பார்க்க

வயநாடு நிலச் சரிவு: திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமம் ரூ.18 லட்சம் நிவாரண உதவி

கேரள மாநிலம் வயநாடு நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் சாா்பில் ரூ.18 லட்சம் நிவாரணமாக கேரள மா... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில், 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கு அன்பான, பணிவான சேவை -முதலாமாண்டு மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

நோயாளிகளுக்கு அன்பான, பணிவான சேவையாற்ற வேண்டும் என முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா். திருவள்ளுா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மாணவ, மாண... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி

பணியின்போது திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த மத்தூா் ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ரூ .50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி ச... மேலும் பார்க்க

மாநில போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2 -ஆம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யாவை முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா். தமிழக சிறுசேமிப்புத் த... மேலும் பார்க்க