தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 33 % அதிகம்: நாகையில் 1,187 மி.மீ. பதிவு
சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
தொண்டி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும் வருகிற ஜன.15-ஆம் தேதியில் கட்டாய குழந்தைத் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் சைல்டு லைன் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மூலம் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிறுமி குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும் சிறுமியின் பெற்றோா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.