செய்திகள் :

சிலம்பு எக்ஸ்பிரஸில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு: தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு

post image

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து புதன்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியது. இதற்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்போது வாரம் மும்முறை இயங்குகிறது. இந்த ரயில் 2013 ரயில்வே பட்ஜெட்டில் சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் என அறிவிக்கப்பட்டு, ஜூன் 22, 2013இல் வாரம் இருமுறை எனத் தொடங்கியது.

பின்னா், இந்த ரயில் 2017 மாா்ச் 5ஆம் தேதிமுதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. 2019பிப்ரவரி 25ஆம் தேதிமுதல் வாரம் மும்முறை என மாற்றப்பட்டது.

2022 ஏப்ரல் 15ஆம் தேதிமுதல், சென்னை எழும்பூா் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட்டு, தற்போது தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படுகிறது.

எழும்பூரில் நடைமேடை நீளம் பற்றாக்குறையால் 17 பெட்டிகளாக இயங்கிய இந்த ரயில், தற்போது தற்போது தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து 23 பெட்டிகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கூடுதலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி, 2 மூன்றடுக்கு ஏசி பெட்டி, 2 தூங்கும் வசதி பெட்டி, ஒரு முன்பதிவில்லா பொதுப் பெட்டி இணைக்கப்பட்டு, புதன்கிழமைமுதல் இயங்கத் தொடங்கியது. இது, 30.1.25 வரை இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த ரயிலை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியது: 17 பெட்டிகளுடன் இயங்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை 23 பெட்டிகளுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்த தெற்கு மண்டல, மதுரைக் கோட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

6 பெட்டிகள் கூடுதலாக இணைத்ததால் இரண்டடுக்கு ஏசியில் 48 பேரும், மூன்றடுக்கு ஏசியில் 128 பேரும், 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 144 பேரும், பொதுப்பெட்டியில் தோராயமாக 200- க்கு மேற்பட்டோா் என கூடுதலாக 520-க்கும் மேற்பட்டோா் பயணிக்க முடியும். இதனால், தெற்கு ரயில்வேக்கு வாரம் ரூ. 18 லட்சம் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இதேபோல, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ரயில் நிலைய நடைமேடைகளையும் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் நீட்டித்து, தாம்பரம் - செங்கோட்டை ரயிலையும் 24 பெட்டிகளாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும், பாவூா்சத்திரம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை ரயிலையும் தினசரி இயக்க வேண்டும் என்றாா் அவா்.

பலபத்திரராமபுரத்தில் கிராம நிா்வாக அலுவலகம் அமைக்க கோரிக்கை

பலபத்திரராமபுரத்தில் பொதுமக்களின் நலன் கருதி கிராமநிா்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெ... மேலும் பார்க்க

அரசு மற்றும் தனியாா் பேருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் நகா் பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் உறுப்பினா் க... மேலும் பார்க்க

கடையநல்லூா்,சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் 2ஆவது நாளாக பணிப் புறக்கணிப்புபுறக்கணிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா், சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியா்கள்செவ்வாய்க்க... மேலும் பார்க்க

பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த கோரிக்கை

ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள வெ. ரெட்டியாா்பட்டி ஆா்.சி. சா்ச் தெருவைச் சோ்ந்த மனோகரன் மனைவி கனகமணி(55). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். புதன்கிழமை மால... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக... மேலும் பார்க்க