செய்திகள் :

`சிவசேனாவை உடைத்த ஷிண்டேவுக்கு விருதா?’ - சரத் பவார் மீது பாய்ந்த உத்தவ் தரப்பு

post image

உடைந்த சிவசேனா..!

மகாராஷ்டிராவில் 2022-ம் ஆண்டு சிவசேனாவை கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே இரண்டாக உடைத்தார். தற்போது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணியிடம் இருக்கிறது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தோல்வியை சந்தித்தது. கடந்த இரண்டு ஆண்டில் சிவசேனா மட்டுமல்லாது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்தது.

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) தலைவர் சரத்பவார் அகில பாரதிய மராத்தி சாஹித்ய சம்மேளனின் 98வது ஆண்டு விழாவை நடத்தினார். இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு சரத்பவார் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. இவ்விழாவில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு சரத்பவார் மஹாத்ஜி ஷிண்டே ராஷ்டிர கெளரவ் புரஷ்கர் விருது கொடுத்து கெளரவித்தார்.

சஞ்சய் ராவுத்

இதில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, `தான் சரத்பவாருடன் நல்ல உறவை பேணுவதாக’ குறிப்பிட்டு இருந்தார். சரத்பவாரும் ஏக்நாத் ஷிண்டேயை இந்நிகழ்ச்சியில் புகழ்ந்தார். மகாராஷ்டிரா வளர்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே முக்கிய பங்கு வகிப்பதாக சரத்பவார் குறிப்பிட்டு இருந்தார். இவ்விழாவில் பா.ஜ.கவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் கலந்து கொண்டார். இது உத்தவ் தாக்கரேயிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

அதோடு மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே மகாவிகாஷ் அகாடி கூட்டணி அரசு கவிழவும் காரணமாக இருந்தார். அப்படிப்பட்ட ஏக்நாத் ஷிண்டேயை அழைத்து சரத்பவார் கெளரவித்து இருப்பது குறித்து உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குழப்பத்தில் மகாவிகாஷ் அகாடி கூட்டணி

அவர் தனது பேட்டியில், ``சரத்பவார் விழாவில் கலந்து கொண்டு ஏக்நாத் ஷிண்டேயிக்கு விருது கொடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சரத்பவார் போன்ற ஒரு தலைவர் சிவசேனாவை உடைத்து முதுகில் குத்திய நபருக்கு எப்படி விருது கொடுக்கலாம். இதனை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டெல்லியில் நடந்தது அரசியல் புரோக்கர்களின் சந்திப்பாகும். அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் இது போன்ற விருதுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கும். அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டு இருக்கும்''என்று காட்டமாக தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் கருத்து குறித்து சரத்பவாரின் பேரன் ரோஹித்பவார் கூறுகையில்,''சஞ்சய் ராவத்தின் கருத்து ஆச்சரியமளிக்கிறது. சமூக-கலாச்சார நிகழ்வுகளுக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு மகாராஷ்டிராவில் எப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளில் பாஜக விளையாடிய மோசமான அரசியலைக் கருத்தில் கொண்டு சஞ்சய் ராவத் இவ்வளவு அவசரமாக விமர்சனம் செய்திருக்கிறார்," என்று கூறினார்.

ஏக்நாத் ஷிண்டே கட்சி சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகி சாய்னா என்.சி. இது குறித்து கூறுகையில், ``சஞ்சய் ராவத்திற்கு விருது கிடைக்கவில்லை என்பதால் இது போன்று பேசுகிறார். அவர் மனநிலையை இழந்து விட்டார்” என்று குறிப்பிட்டார். ஏற்கனவே உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக கூறிக்கொண்டிருக்கிறார். அது போன்ற சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டேயை அழைத்து சரத்பவார் விருது கொடுத்து இருப்பது மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 12)உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ இந்த இயக்க... மேலும் பார்க்க

Kamal: நேற்று அமைச்சர், இன்று துணை முதல்வர்... கமல்ஹாசனை நேரில் சந்தித்த உதயநிதி!

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், `மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கித் தோல்வியடைந்தார். அதி... மேலும் பார்க்க

மலக்குழி மரணங்கள்: சுத்தம் செய்ய வேண்டியது பாதங்களை அல்ல; உங்கள் மண்டையை!

"இனி ஒரு போதும் உங்கள் குப்பைகளில் ஒரு துரும்பைக் கூட நாங்கள் எடுக்க மாட்டோம்", "நாங்களும் மனிதர்கள்தான்" - அமெரிக்காவிலுள்ள மெம்பிஸ் நகரம் ஆப்ரோ அமெரிக்கத் தூய்மை பணியாளர்களால் ஸ்தம்பித்தது. எங்குப் ... மேலும் பார்க்க

``அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது..."- அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க-வின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டு பா.ஜ.க-வின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ... மேலும் பார்க்க

கழுகார்: 'கோட்டை' சீனியருக்கு 'கீ' கொடுத்தாரா தங்கமான மாஜி? டு சிக்கலில் மாட்டிய 'சக்கர'ப் புள்ளி!

செம கடுப்பில் அதிகாரிகள், நிர்வாகிகள்!கப்பத்தை உயர்த்திய ஆளுங்கட்சிப் பிரமுகர்...'ஜில்' மாவட்டத்தில், மாநில அரசுத் திட்டம் முதல் மத்திய அரசுத் திட்டம் வரை எல்லாவற்றுக்கும் கப்பம் வசூலித்துவந்தார் அந்த... மேலும் பார்க்க

ஊட்டி: 80 அரசு தொடக்கப்பள்ளிகளை ரகசியமாக மூடும் திட்டத்தில் அதிகாரிகள்?! - நடப்பது என்ன?

மலை மாவட்டமான நீலகிரி, பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மலை காய்கறி விவசாய கூலிகள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கல்வி கற்கும் இந்த மக்களின் ... மேலும் பார்க்க