'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" - டிடிவி தினகரன்
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன் இன்று (நவ.1) செய்தியாளர்களிடம் பேசியபோது, "செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்குத் தகுதியில்லை. மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அம்மாவின் (ஜெயலலிதா) தீவிர விசுவாசி.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கெல்லாம் செங்கோட்டையன் வருத்தப்படுபவர் அல்ல. இப்போது இருப்பது ADMK இல்லை EDMK. அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி. எடப்பாடியின் திமுக வரும் தேர்தலில் மக்களால் வீழ்த்தப்படும்" என்று கூறியிருக்கிறார்.

















