செய்திகள் :

சென்னை ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய நபர்கள்!- இபிஎஸ் கடும் கண்டனம்

post image

சென்னை ஈசிஆரில் காரில் இருந்த பெண்களை சில மர்ம நபர்கள் காரில் துரத்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,

'சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இதுகுறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிக்க | ஆளுநருக்கு நடத்தை விதிகள்! திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்!

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமைகூட திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்துதான் செயல்படுமா?

'யார் அந்த சார்?' என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த முதல்வர் ஸ்டாலின், இந்த சார்-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?

மாநிலத்தின் பிரதான சாலையான ஈசிஆரில், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இந்த வழக்கில், நேர்மையாக முதல் தகவல் அறிக்கை பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியாகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு: மேயர் பிரியா

பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.சென்னையில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தி... மேலும் பார்க்க

ரூ. 11.63 கோடியில் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாணை

சென்னை: தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.11.63 கோடி மற்றும் ரத்த மையத்தினை மேம்படுத்துவதற்கு ரூ.1.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ... மேலும் பார்க்க

'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்றும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தியின் நிகழ்வுகளை சென்னையில் உள்ள காந்தி மண்... மேலும் பார்க்க

சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!

மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.மதுரை திருமங்கலம் -கொல்லம் சாலையில் 4 வழிச் சாலை பணிகளால் விபத்துகள் அதிகமாக நடப்பதாக அப்பகுதி... மேலும் பார்க்க