செய்திகள் :

சென்னை: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? - போக்குவரத்து இணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணி

post image

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் பணியாற்றி வந்தார். இவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் என டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தோம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகள் சிலர், ``கடந்த 1999-ம் ஆண்டு குரூப் ஒன் தேர்வு மூலம் டி.எஸ்.பியாக பணிக்குச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரின் சொந்த ஊர் தென்காசி. டி.எஸ்.பி பயிற்சி முடிந்த பிறகு இவர் பவானிஉள்ளிட்ட இடங்களில் டி.எஸ்.பியாக பணியாற்றினார். அதன்பிறகு எஸ்.பி பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி, நெல்லை. சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய இவர், சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் டி.ஐ.ஜியாக பதவிஉயர்வு பெற்று தற்போது சென்னை போக்குவரத்து பிரிவின் இணை கமிஷனராக பணியாற்றி வந்தார்.

மகேஷ்குமார் ஐபிஎஸ்

இந்தநிலையில், இணை கமிஷனர் மகேஷ்குமார் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மகேஷ்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் கொடுத்த புகாரில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் விசாகா கமிட்டிக்கு அந்தப் புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

இணை கமிஷனர் மகேஷ்குமார் தரப்பில் பேசியவர்கள், ``டிப்பார்ட்மெண்டில் எந்தவித குற்றச்சாட்டுக்களிலும் சிக்காத மகேஷ்குமார் மீது வேண்டுமென்ற இந்தப் புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். புகார் கொடுத்த பெண் காவலர் தரப்பு இந்த விவகாரத்தை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி. விசாகா கமிட்டி விசாரணையில்தான் யார் மீது தவறு இருப்பது தெரியவரும். அதற்குள் மகேஷ்குமார் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை ஒரு தரப்பினர் பரப்பி வருகிறார்கள்" என்றனர்.

சென்னை: கண்டக்டருடன் தகராறு; அரசு பேருந்தைக் கடத்தி அதிர வைத்த இளைஞர்! - என்ன நடந்தது?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சோதனைச் சாவடி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மாநகர அரசு பேருந்து நள்ளிரவில் லேசாக மோதியது. பின்னர் பேருந்தை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றுவிட்டார். அ... மேலும் பார்க்க

தஞ்சை: கல்லாவை குறிவைத்த கொள்ளையர்கள்; ஒரே இரவில் 5 கடைகளில் திருட்டு; அச்சத்தில் வணிகர்கள்!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி காலனி பகுதியில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், மளிகை, பேக்கரி, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பகல் நேரத்தில் மக்கள் ந... மேலும் பார்க்க

சேலம்: பேருந்தில் இடம்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.. 9 -ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட தாவாந்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன... மேலும் பார்க்க

ஊட்டி: காதலியுடன் லவர்ஸ் டே கொண்டாட கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் - பகீர் பின்னணி!

மூன்று மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரியில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர சோ... மேலும் பார்க்க

சேலம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பிளஸ் 1 மாணவர்கள் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 750 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்... மேலும் பார்க்க

Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூரியில் கொடூர ராகிங்

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் அரசு நர்ஸிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகி... மேலும் பார்க்க