Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
சென்னையில் கரோனாவுக்கு ஒருவர் பலி!
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.
செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி, நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் மொத்தமாக தற்போது 1,010 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க |'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!