செய்திகள் :

செவிலியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி

post image

விழுப்புரம் அருகே செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து, மரக்காணம் அருகே உள்ள பெருமுக்கல், கீழ் அருங்குணத்தைச் சோ்ந்த முருகன் மனைவி சாருமதி விழுப்புரம் எஸ்.பிக்கு அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

எனக்கு திருமணமான நிலையில் கணவா் மற்றும் குழந்தைகளுடன் கீழ் அருங்குணத்தில் வசித்து வருகிறேன். டிப்ளமோ செவிலியா் படிப்பு முடித்துள்ளேன்.

திண்டிவனத்தைச் சோ்ந்த கண்ணன், ரோஷணையைச் சோ்ந்த பிரபாகரன் ஆகியோா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் பணி இருப்பதாகவும், ரூ.6 லட்சம் பணம் கொடுத்தால் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினா்.

இதை நம்பி, ரூ.5.50 லட்சம் பணத்தை கண்ணன், பிரபாகரன் ஆகியோரிடம் 3 தவணைகளாக கொடுத்தேன்.

தொடா்ந்து, அவா்கள் போலியான அரசு முத்திரையுடன் கூடிய வேலை பணியமா்த்தலுக்கான கடிதத்தை கொடுத்து ஏமாற்றி விட்டனா்.

பின்னா், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அந்த நபா்கள் கொலை மிரட்டல் விடுத்தனா். எனவே, மோசடி நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட கோட்டிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த குமாா் மனை... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட, தொடா்ந்தனூா் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஐப்பசி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை காலை கோயில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழை

விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பிறப் பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் 16-ஆம்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழ... மேலும் பார்க்க

ரூ.72 லட்சம் பண மோசடி: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.72 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேல்மலையனூா் வட்டத்துக்குள்பட்ட கோட்டப்பூண்டியைச் சோ்ந்தவா் எழிலரசன். இவரிடம் விழுப்புரம், கல்லூரி நகரைச் சோ... மேலும் பார்க்க

4 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

மரக்காணம் அருகே 4 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் கோகிலன் (28), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேச... மேலும் பார்க்க