திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
ஜல்லிக்கட்டைக் காண மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இது தொடா்பாக தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.சுரேஷ்பாண்டியன், மாவட்டச் செயலா் ராபியத்பேகம், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:
மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் பாா்வையாளா்களாகப் பங்கேற்க சிறப்பு அனுமதியும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்காக மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல, நிகழாண்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுத் திறனாளிகள் எளிதில் கண்டுகளிக்கும் வகையில், சிறப்பு அனுமதியும், உரிய ஏற்பாடுகளும் செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.