மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக, ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மேலும், இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹைதா் அலி என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசாா் அகமது, ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த சிறை தண்டனையை எதிா்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைவரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அவா்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி வசூலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளாா். இந்த தண்டனையை எதிா்த்து மனுதாரா்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.